தொழில்சார் வல்லுநர்கள் அமைப்பிற்கும் (OPA) பிரதமருக்கும்...
News
தொழில்சார் வல்லுநர்கள் அமைப்பிற்கும் (OPA) பிரதமருக்கும் இடையில் சந்திப்பு
இன்று (08) பாராளுமன்ற வளாகத்தில் இலங்கை தொழில்சார் வல்லுநர்கள் அமைப்பின் (OPA) பிரதிநிதிகளுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
பல்வேறு துறைகளிலும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நேரடியாகவே தொழில்சார் ஆலோசனைகளை வழங்குவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்கத் தாம் எதிர்பார்ப்பதாகவும், விவசாயம், கட்டுமானத்துறை, மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற பல்வேறு துறைகளில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள பொதுமக்களுக்கு, அந்தந்த தொழில்சார் சங்கங்களின் ஊடாகவே முன்கூட்டிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் (Pre-advice) வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டங்களைச் செயற்படுத்த OPA நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நாட்டினுள் தொழில்சார் தகைமையினையும் தேசிய பணியினையும் மேலோங்கச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை தொழில்சார் வல்லுநர்கள் அமைப்பின் தலைவர், உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.