New Updates! Fresh news just arrived.

வெளிநாட்டுப் புறாக்களை நாட்டிற்குள் கொண்டு வந்த வணிகர்கள்...

News

வெளிநாட்டுப் புறாக்களை நாட்டிற்குள் கொண்டு வந்த வணிகர்கள் விமான நிலையத்தில் கைது!

July 26, 2026 2:19 pm
வெளிநாட்டுப் புறாக்களை நாட்டிற்குள் கொண்டு வந்த வணிகர்கள் விமான நிலையத்தில் கைது!
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த 3,431,400 ரூபா மதிப்புள்ள 64 வெளிநாட்டுப் புறாக்களுடன் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், அறிவிப்பு எதுவும் தேவையில்லாத 'பசுமைப் பாதை' வழியாக புறாக்களை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது, ​​நேற்று இரவு (25) விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த, செல்லப் பிராணிகள் கடைகளை நடத்தி வரும் 30 வயதுடைய இரண்டு வணிகர்கள் ஆவர்.

அவர்கள் இத்தாலியில் இருந்து இவற்றினை வாங்கி, துபாய்க்கு விமானத்தில் கொண்டு வந்து, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்தனர்.

இலங்கையின் வனவிலங்கு மற்றும் தாவரவியல் கட்டளைச் சட்டம் மற்றும் விலங்கு தனிமைப்படுத்தல் விதிகளை மீறி இந்தப் புறாக்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அவர்கள் தங்களுடன் கொண்டு வந்திருந்த 06 பயணப் பைகளுக்குள், சிறிய உலோகக் கூண்டுகளில் இந்தப் புறாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளுக்குப் பிறகு, இந்தப் புறாக்கள் இத்தாலிக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக ஒப்படைக்கப்பட உள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now