New Updates! Fresh news just arrived.

செய்திக்கு பலன் கிடைத்தது: நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு...

News

செய்திக்கு பலன் கிடைத்தது: நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு!

May 28, 2026 12:57 pm
செய்திக்கு பலன் கிடைத்தது: நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு!
கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது என கடந்த மே மாதம் 21 ஆம் திகதி செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இன்று கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் அறிவுறுத்தலுக்கமைய இப்பகுதியில் கனரக வாகனத்தின் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டு கொட்டப்பட்டிருந்த துர்நாற்றம் வீசும் குப்பைகள் யாவும் உழவு இயந்திரத்தின் மூலம் அவ்விடத்தில் இருந்து அகற்றி செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இச்செயற்பாட்டினை துரித கதியில் செயற்படுத்திய மாநகர ஆணையாளர் தகவலை வெளிப்படுத்திய ஊடகங்கள் ஊடகவியலாளர்களுக்கு பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

பாறுக் ஷிஹான்



கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகிலுள்ள காணி குப்பை கூழங்களினால் நிரம்பி காணப்படுகின்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் கோவில் காணியில் போடப்படும் குப்பையினால் வீதியின் இரு மருங்கிலும் குப்பை கூழங்கள்களினால் நிரம்பி வழிகின்றன.

இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியால் உடற்பயிற்சிக்கா செல்லும் மக்கள் பெரும் சிரமங்களினை எதிர்கொண்டுள்ளனர். இது தவிர அருகிலுள்ள கடற்கரை பகுதிக்கும் குறித்த குப்பை கூழங்கள் காற்றினால் பரவி விழுகின்றன.

மேலும் குறித்த காணியில் கொட்டப்படுகின்ற குப்பைகளில் பியர் ரின்கள் பிளாஸ்டிக் கலன்கள் உள்ளிட்ட உக்க முடியாத பல்வேறு பொருட்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


மேலும் காணியில் தேங்கி நிற்கும் குறித்த குப்பைகளினால் நீர் நிலை தேங்குவதனால் டெங்கு போன்ற நோய்களும் பரவ காரணமாக அமைகின்றது.

அத்தோடு, கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் குறித்த கண்ணகி அம்மன் கோவில் காணி காணப்படுவதோடு தொடர்ச்சியாக சட்டவிரோத குப்பை கூழங்கள் தினமும் கொட்டப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் நாய்கள் மாடுகள் காகங்கள் குப்பைகளினை உண்பதோடு இதனால் அயலிலுள்ள கிணறுகள் கால்வாய்கள் அசுத்தமடைகின்றன.

கல்முனை மாநகர சபையானது எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்று பெதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now