New Updates! Fresh news just arrived.

வாகனம் வாங்க காத்திருப்போருக்கான செய்தி - விதிக்கப்படும் ...

News

வாகனம் வாங்க காத்திருப்போருக்கான செய்தி - விதிக்கப்படும் வரி குறித்து வெளியான தகவல்

March 7, 2026 10:07 am
வாகனம் வாங்க காத்திருப்போருக்கான செய்தி - விதிக்கப்படும் வரி குறித்து வெளியான தகவல்
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய சுங்க வரி திருத்தங்கள் குறித்து, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் முக்கிய விளக்கமளித்துள்ளது.

நிதி அமைச்சகத்தின் நிதி கொள்கை திணைக்கள அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, வரி அமைப்பில் பின்வரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சுங்க இறக்குமதி வரி (Customs Import Duty - CID) - தற்போதுள்ள 20 வீத வரி விகிதம் 30 வீதமாக ஆக உயர்த்தப்பட உள்ளது.

சுங்க வரி கூடுதல் கட்டணம் (Surcharge) - தற்போது நடைமுறையில் உள்ள 50 வீத கூடுதல் கட்டணம், மற்றொரு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ரத்து செய்யப்பட உள்ளது.

இந்த வரி திருத்தங்களின் ஒட்டுமொத்த விளைவாக, வாகன இறக்குமதிக்கான மொத்த சுங்க வரி கட்டமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது.

இருப்பினும், ஏப்ரல் 1 முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு, தற்போதுள்ள வரிகளுடன் கூடுதலாக 2.5 வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) மட்டும் சேர்க்கப்படும்.

இதுவே வாகன இறக்குமதியாளர்களுக்கு ஏற்படும் ஒரே கூடுதல் செலவாகும் என்று சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now