New Updates! Fresh news just arrived.

பயனர்களின் புகைப்படங்களை முறையான அனுமதியின்றி அணுகியதாக க...

News

பயனர்களின் புகைப்படங்களை முறையான அனுமதியின்றி அணுகியதாக குற்றச்சாட்டு: மெட்டா நிறுவனத்திற்கு 887 மில்லியன் டொலர் அபராதம் விதிப்பு!

November 15, 2026 9:04 pm
பயனர்களின் புகைப்படங்களை முறையான அனுமதியின்றி அணுகியதாக குற்றச்சாட்டு: மெட்டா நிறுவனத்திற்கு 887 மில்லியன் டொலர் அபராதம் விதிப்பு!
பயனர்களின் புகைப்படங்களை முறையான அனுமதியின்றி அணுகியதற்காக, ஃபேஸ்புக் சமூக வலைதளத்தின் உரிமையாளரான மெட்டா நிறுவனத்திற்கு இத்தாலிய தரவுப் பாதுகாப்பு ஆணையம் 887 மில்லியன் டொலர் அபராதம் விதித்துள்ளது.

ஃபேஸ்புக் அம்சம் ஒன்றின் மூலம் சுமார் 20 மில்லியன் ஆண்ட்ராய்டு பயனர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் முறையான அனுமதியின்றி அணுகப்பட்டது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனத்திற்கு இந்த அபராதத்தை விதிக்க ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு சமூக ஊடக வலைதளத்திற்கு எதிராக இத்தாலிய தரவுப் பாதுகாப்பு ஆணையம் விதித்த மிகப்பெரிய அபராதம் இது என்று கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now