New Updates! Fresh news just arrived.

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வ...

News

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்!

March 22, 2026 2:23 pm
பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்!
பலத்த மின்னல் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் இன்று (22) நண்பகல் 12.30 மணிக்கு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் சுமார் 1.00 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now