New Updates! Fresh news just arrived.

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளிய...

News

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களம்

September 27, 2026 8:24 pm
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடுத்த 36 மணித்தியாலங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை அத்தோடு முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now