New Updates! Fresh news just arrived.

கனமழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! - Gu...

News

கனமழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

August 25, 2026 7:59 am
கனமழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அனுராதபுரம், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டினுடைய ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.

மத்திய மலைநாட்டினுடைய மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வரையுமான வேகத்தில் ஓரளவு பலத்த காற்றும் வீசக் கூடும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now