கொழும்பில் நாளை முதல் மெட்ரோ பஸ் சேவை!
News
கொழும்பில் நாளை முதல் மெட்ரோ பஸ் சேவை!
கொழும்பு நகரம் முழுவதும் மெட்ரோ பஸ் சேவை நாளை (29) முதல் விரிவுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் 121 பஸ்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளன.
பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்து, தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதே திட்டத்தின் முக்கிய நோக்கம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, காலை 6.00 முதல் 9.00 மணி வரையும், மாலை 4.00 முதல் 7.00 மணி வரையும், மூன்று வழித்தடங்களில் ஒரு வழித்தடம் பொதுப் போக்குவரத்து பஸ்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.