மீலாதுன் நபி தினம்: முஸ்லிம் மக்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து...
News
மீலாதுன் நபி தினம்: முஸ்லிம் மக்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து!
இன்று (26) அனுஷ்டிக்கப்படும் புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு, இலங்கையிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் முஸ்லிம் மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையும் போதனைகளும் அமைதி, சகோதரத்துவம், நீதி, சமத்துவம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதர்களை இனம், நிறம், சாதி அல்லது சமூகப் பின்னணி அடிப்படையில் வேறுபடுத்தாமல், அனைவரும் சமமானவர்கள் என்ற உயரிய கொள்கையை நபிகள் நாயகம் வலியுறுத்தியதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும் அவரது போதனைகள் முக்கிய வழிகாட்டுதல்களை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் ஆட்சி, சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கம் கொண்ட நாட்டை உருவாக்குவதற்கும் நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரிகள் வழிகாட்டியாக அமைய முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனிமனித மற்றும் சமூக ஒழுக்கத்தை பாதிக்கும் தீமைகளை தவிர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நபிகளாரின் போதனைகள் ஊக்கமளிக்கக்கூடியவை என்றும் தெரிவித்துள்ளார்.
வெறுப்பு மற்றும் பிளவுகளுக்கு பதிலாக அன்பு, சகோதரத்துவம், சகிப்புத்தன்மை மற்றும் மனிதநேயம் மேலோங்கும் சமூகத்தை உருவாக்க அனைவரும் பங்களிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இறுதியாக, நபிகள் நாயகத்தின் வாழ்க்கை மற்றும் போதனைகளை முன்மாதிரியாகக் கொண்டு அர்த்தமுள்ள வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுமாறு முஸ்லிம் மக்களிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் தனது மீலாதுன் நபி தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.