New Updates! Fresh news just arrived.

மின்வெட்டு தொடர்பான தகவல்களுக்கு எரிசக்தி அமைச்சர் விளக்க...

News

மின்வெட்டு தொடர்பான தகவல்களுக்கு எரிசக்தி அமைச்சர் விளக்கம்!

September 5, 2026 9:09 am
மின்வெட்டு தொடர்பான தகவல்களுக்கு எரிசக்தி அமைச்சர் விளக்கம்!
நாட்டின் மின்சார விநியோகத்தைத் தொடர்ந்து சீராக முன்னெடுப்பதில் தற்போது எந்தவித தடையும் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

நிலக்கரி கையிருப்பு தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் காரணமாக எதிர்காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மின் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் வகையிலான நிலைமை தற்போது இல்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளுக்குத் தேவையான நிலக்கரியை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அனுர கருணாதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now