குவைத் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்: வான்வழி பாது...
News
குவைத் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்: வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில்!
குவைத் நாட்டை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல்களுக்கு எதிராக வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் (Air Defence Systems) தற்போது செயல்பட்டு தாக்குதல்களை தடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பெரிய சத்தங்கள் அல்லது வெடிப்பு சத்தங்கள் கேட்டால், அவை எதிரியின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாடுகளின் விளைவாகும்” என்றும் இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு மற்றும் அவசர வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.