New Updates! Fresh news just arrived.

மாயமான 2.5 மில்லியன் டொலர்: இன்று மீண்டும் கூடும் அரசாங்...

News

மாயமான 2.5 மில்லியன் டொலர்: இன்று மீண்டும் கூடும் அரசாங்க நிதி பற்றிய குழு!

June 23, 2026 10:49 am
மாயமான  2.5 மில்லியன் டொலர்: இன்று மீண்டும் கூடும் அரசாங்க நிதி பற்றிய குழு!
திறைசேரியிலில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போனமை தொடர்பில் ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழுவானது இன்று (23) மீண்டும் கூடவுள்ளது.

குறித்த குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் இக்கூட்டமானது நடைபெறவுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழுவினுடைய இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு திறைசேரிச் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோருக்கும் அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விளக்கிய குறித்த குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க,

"மத்திய வங்கியும், நிதி அமைச்சும் குறித்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் முறைகேடு தொடர்பிலான அறிக்கை அளித்துள்ளன. நிதி அமைச்சு ஒரு வாரத்திற்கு முன்பே வழங்கி இருந்தது. மத்திய வங்கி 4-5 நாட்களுக்கு முன்பு வழங்கியுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடி, இதில் எங்கு முரண்பாடு இருந்தது, எங்கு பிரச்சினை இருந்தது என்பதினை வெளிப்படுத்தும் கூட்டமானது இன்று பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெறவுள்ளது. நிதி அமைச்சின் செயலாளருக்கும் அதன் பணியாளர்களுக்கும், மத்திய வங்கி ஆளுநருக்கும் அதற்குத் தேவையான பணியாளர்களுக்கும் இன்று பாராளுமன்றத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது." என்றார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now