New Updates! Fresh news just arrived.

பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு! ...

News

பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு!

March 1, 2026 8:18 pm
பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு!
வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலிற்கு தொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன தொழிலாளி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் தொழில் நிமித்தம் சென்ற குறித்த தொழிலாளி பயணித்த படகின் இயந்திரத்தில் தூண்டில் கயிறு சிக்கிய நிலையில் அதனை சீர்செய்ய முற்பட்ட போது கடலில் வீழ்ந்து காணாமல் போனதாகக் கூறப்படுகின்றது.

பின்னர் அவருடன் சென்ற சக தொழிலாளி தகவல் வழங்கியதினைத் தொடர்ந்து பருத்தித்துறை கொட்டடிப் பகுதி மீனவர்கள் சுமார் 25க்கு மேற்பட்ட படகுகளில் குறித்த பாதிக்கு சென்று தேடியதில் சடலம் மீட்க்கப்பட்டு இன்று காலை 10 மணியளவில் கரை சேர்த்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி பருத்தித்துறை கொட்டடியினை சேர்ந்த விஜயகுமார் நிக்சன் (23) என்ற ஒரு பிள்ளையினுடைய தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now