New Updates! Fresh news just arrived.

யாழில் சிறுமி காணாமல் போன சம்பவம் – 27 வயது இளைஞர் கைது! ...

News

யாழில் சிறுமி காணாமல் போன சம்பவம் – 27 வயது இளைஞர் கைது!

August 23, 2026 7:19 am
யாழில் சிறுமி காணாமல் போன சம்பவம் – 27 வயது இளைஞர் கைது!
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி காணாமல் போனதாக அவரது பெற்றோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணைகளின் போது, அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்று தங்க வைத்திருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதுடன், சிறுமியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now