எரிபொருள் போக்குவரத்துக் கட்டணம் குறித்து திங்கட்கிழமை மு...
News
எரிபொருள் போக்குவரத்துக் கட்டணம் குறித்து திங்கட்கிழமை முடிவு!
எரிபொருள் போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இடையே நேற்று (02) விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
புதிய கட்டண முறைமை மற்றும் அதற்கான சூத்திரத்தை மேலும் ஆராய்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை வரை அவகாசம் கோரப்பட்டுள்ளதாக பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல், டயர்கள், பேட்டரிகள், பராமரிப்பு மற்றும் ஊழியர்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளதால், போக்குவரத்துக் கட்டணத்தில் சராசரியாக 20 சதவீத உயர்வை எதிர்பார்ப்பதாக சங்கத்தின் தலைவர் ஏ. எம். எச். அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதிய கட்டண சூத்திரம் தொடர்பான சிக்கல்களைத் தீர்த்து, திங்கட்கிழமை இறுதி முடிவை எட்ட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.