மாதாந்தம் மருந்துகள் தொடர்பான மீளாய்வு!
News
மாதாந்தம் மருந்துகள் தொடர்பான மீளாய்வு!
வைத்தியசாலைகளில் தொடர்ச்சியான மருந்து விநியோகத்தினை பேணுவதற்காக, ஒவ்வொரு வைத்தியசாலையிலும் மாதத்திற்கு ஒரு முறை மருந்துகள் குறித்தான மீளாய்வு கூட்டங்களினை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்காணிப்பு விஜயம் ஒன்றில் ஈடுபட்டிருந்த நிலையில் பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மருந்துகளுக்கு ஏதேனும் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்னர் அதனை இனங்கண்டு அதற்கான உரிய தீர்வுகளினை காண்பதற்கும், பிராந்திய கொள்வனவுகள் ஊடாக வைத்தியசாலைக்குள் தொடர்ச்சியான மருந்து விநியோகத்தினை பேணுவதற்கும் அந்த மருந்துகள் குறித்து மீளாய்வு கூட்டம் மிகவும் முக்கியமானது என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லா நேரங்களிலும் வைத்தியசாலைகளில் தேவையான மருந்து இருப்பினை பேணிக்கொள்ள முடியுமானால், அது மருந்துகள் தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒரு சாதகமான தீர்வாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மருத்துவ விநியோகப் பிரிவின் மருந்து விநியோக வலையமைப்பினை சீர்செய்ய எப்போதும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.