New Updates! Fresh news just arrived.

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் மாதக்கூட்டமும் விசேட...

News

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் மாதக்கூட்டமும் விசேட கௌரவிப்பும் !

May 4, 2026 3:42 pm
சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் மாதக்கூட்டமும் விசேட கௌரவிப்பும் !
சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் மே மாதக்கூட்டமும், அதனுடன் இணைந்த விசேட கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (03) காலை 10.00 மணிக்கு சம்மாந்துறையில் அமைந்துள்ள பிக் செப் உணவகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எல். அப்துல் சலீம் தலைமையில் நடைபெற்றதுடன், செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ஜே.எம். நவாஸ் அவர்களின் ஒழுங்கமைப்பில் நிகழ்வுகள் ஒழுங்காக முன்னெடுக்கப்பட்டன.

நிகழ்வின் ஆரம்ப கட்டமாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல். ரியாஸ் ஆதம் அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நினைவுச்சின்னமும் பொன்னாடையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தங்களது சட்டத் தொழிலில் சுமார் 10 ஆண்டுகளை நிறைவு செய்து சிரேஷ்ட நிலையை அடைந்த மூன்று சட்டத்தரணிகள் – ஏ.ஜே.எம். நவாஸ், யூ.எல்.எம். சமீம் மற்றும் வி.ரி. ஹசீனா – ஆகியோர் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் கௌரவப்பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இக்கௌரவிப்பு நிகழ்வுகள் அனைத்தும் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாதாந்திர கூட்டம், தலைவர் கே.எல். அப்துல் சலீம் தலைமையில் பகற்போசனத்துடன் நடைபெற்றது. கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் சங்கத்தின் பொருளாளர் யூ.எல்.சிபானா உள்ளிட்டவர்களுடன் சிரேஷ்ட சட்டத்தரணிகளான முன்னாள் தலைவர் எஸ்.எம்.எம்.முஸ்தபா, சங்கத்தின் தற்போதைய உப தலைவர் ஏ.எம்.நசீல், வை.எம்.அன்வர் சியாத், ஏ.எச் அறூஸ், எம்.எப்.சாமிலா, ஏ.எல் றியாஸ் ஆதம், எம்.எம்.சஹுபீர் உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள் என ஏராளமான சட்டத்தரணிகள் பங்குபற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now