New Updates! Fresh news just arrived.

ஜிந்துபிட்டியவில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் கூடுத...

News

ஜிந்துபிட்டியவில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் கூடுதல் தகவல்கள்

January 17, 2026 9:52 am
ஜிந்துபிட்டியவில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் கூடுதல் தகவல்கள்
கொழும்பு, ஜிந்துபிட்டியவில் நேற்று (16) இரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இரண்டு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் விளைவாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

அதன்படி, குறித்த சம்பவம் குறித்து மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக காவல்துறை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் 4 வயது சிறுவனும் 3 வயது சிறுமியும் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு குழந்தைகளின் நிலை நன்றாக இருப்பதாகவும், மருத்துவக் குழுக்கள் குழந்தைகளுக்குத் தேவையான சிகிச்சையினை வழங்கி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த கொழும்பு 13 ஐச் சேர்ந்த 44 வயது நபர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்தார்.

ஜிந்துபிட்டிய, 125 வத்த என்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியில் வந்த ஒரு குழுவினர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now