New Updates! Fresh news just arrived.

மண்கும்பானில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்!

News

மண்கும்பானில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்!

September 3, 2026 11:14 am
மண்கும்பானில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்!
நேற்றையதினம் மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில் மேற்படி மோட்டார் குண்டுகள் இருப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அந்தவகையில் இந்த விடயம் ஊர்காவற்துறை பொலிஸாரால் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன்படி அங்கு வந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அவற்றை மீட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now