மோட்டார் சைக்கிள் திருத்தகம் தீக்கிரை: 1 கோடிக்கும் அதிக ...
News
மோட்டார் சைக்கிள் திருத்தகம் தீக்கிரை: 1 கோடிக்கும் அதிக சொத்துக்கள் நாசம்
மத்தேகொடை வீட்டுத்திட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள் திருத்தகம் ஒன்றில் இன்று (23) பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அந்த விற்பனையகம் முற்றாக சேதமடைந்துள்ளதாக மத்தேகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருத்தவேலைக்காக கொண்டுவரப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றின் எரிபொருள் தாங்கியை (Fuel Tank) கழற்றி அகற்றுவதற்கு முற்பட்டபோதே திடீரென இந்த தீப்பற்றல் ஏற்பட்டுள்ளது.
அச்சமயத்தில் உடனடியாகச் செயற்பட்ட விற்பனையகத்தின் உரிமையாளர், எரிபொருள் தாங்கியை கீழே போட்டுவிட்டு திருத்தகத்திலிருந்து வெளியே ஓடித் தப்பித்து தனது உயிரைப் பாதுகாத்துக் கொண்டுள்ளார்.
உரிமையாளர் வெளியே ஓடிய கணத்திலேயே தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியதில் தீ வேகமாகப் பரவியுள்ளதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தீ விபத்தினால் எவருக்கும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், விற்பனையகத்தினுள் இருந்த 10 மோட்டார் சைக்கிள்கள், மின் பிறப்பாக்கி (Generator) ஒன்று மற்றும் திருத்தவேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் தொகுதி உட்பட்ட 1 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்கள் முற்றாக சேதமடைந்துள்ளன.
தீ விபத்து ஏற்பட்ட உடனே செயற்பட்ட மத்தேகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழு, பிரதேசவாசிகளின் உதவியுடன் அருகில் உள்ள ஏனைய விற்பனையகங்களுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தது.
அதனைத் தொடர்ந்து, கோட்டே தீயணைப்புப் பிரிவின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ முற்றாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மத்தேகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.