மலையக ரயில் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு
News

மண் மேடு சரிந்து விழுந்தமையினால் தடைப்பட்டிருந்த மலையக புகையிரதப் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (04) மதியம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட அதிகாரப் பொறியியலாளர் தனுஷ்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மலையக புகையிரதப் பாதையின் பண்டாரவளை மற்றும் ஹீல்ஓயாவிற்கு இடையே 162/54 மைல் கல்லுக்கு அருகில் இன்று காலை ஏற்பட்ட இச்சம்பவம் காரணமாக, மலையக புகையிரதப் பாதையின் போக்குவரத்து நானுஓயாவிலிருந்து பண்டாரவளை வரை வரையறுக்கப்பட்டிருந்தது.
புகையிரதப் பாதையில் விழுந்த மண் மேடு மற்றும் பாறைகளைப் புகையிரதப் பாதை பராமரிப்புப் பிரிவு ஊழியர்களால் அகற்றப்பட்டதை தொடர்ந்து, மலையக புகையிரதப் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் இவ்வாறு வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தனுஷ்க திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.