New Updates! Fresh news just arrived.

மலையக ரயில் போக்குவரத்துக்கு மீண்டும் பாதிப்பு

News

மலையக ரயில் போக்குவரத்துக்கு மீண்டும் பாதிப்பு

October 5, 2026 8:41 pm
மலையக ரயில் போக்குவரத்துக்கு மீண்டும் பாதிப்பு
பேராதனை மற்றும் கெலிஓயா ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட அகுணாவல பகுதியில் இன்று மாலை மீண்டும் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இன்று மாலை 6.20 மணியளவில் குறித்த ரயில் மார்க்கத்தில் இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் குறித்த ரயில் மார்க்கத்தில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விரைவாக மண்மேட்டை அகற்றி போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now