பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது!
News

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
முறையான நடைமுறைகளினை பின்பற்றாமல் தெரிவுசெய்யப்பட்டுள்ள 3 நிறுவனங்களுக்கு மாத்திரம் பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடுகளினை செய்தமை மற்றும் குறித்த நிறுவனங்களுக்குப் பொஸ்பேட் ஏற்றுமதிக்குத் தேவையான உரிமங்களினை பெற்றுக் கொடுப்பதற்கு உதவி புரிந்தமைக்காக, குறித்த நிறுவனங்களிடம் இருந்து 81 இலட்சம் ரூபாவினை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமை தொடர்பிலான குற்றச்சாட்டினை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
அத்தோடு, இது தொடர்பில் இன்றைய தினம் வாக்குமூலத்தினை வழங்க முன்னிலையாகியிருந்த சாமர சம்பத் தசநாயக்க சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க முன்னதாக கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் அவருக்கு தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றி இருந்த சுமதிபால லியனாராச்சி என்பவரும் குறித்த விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.