New Updates! Fresh news just arrived.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்! - G...

News

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்!

September 4, 2026 4:50 pm
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்!
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொழும்பு இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அவர் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இருந்தே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக சர்ச்சைக்குரிய விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.

அங்கு சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ புலனாய்வு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதுடன், அதனடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now