New Updates! Fresh news just arrived.

பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!

News

பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!

May 18, 2026 11:52 am
பாண்டிருப்பில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!
தமிழர்களின் வலி நிறைந்த மே மாத நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று (18) கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பில் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன் உயிர்நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய மாவட்ட அமைப்பாளரான துஷானந்தன் தலைமையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்படி, கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழின அழிப்பின் போது மிஞ்சிய தமிழர்களினுடைய உயிர்களினை காப்பாற்றுவதற்காக உப்பில்லாத அரிசிகளினை உபயோகித்து நீரை ஊற்றி அங்குள்ள கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தைகளினை காப்பாற்றுவதற்காக தயாரிக்கப்பட்டவையே இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியாகும்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now