New Updates! Fresh news just arrived.

கல்லூண்டாய் பிரச்சினைக்கு மாநகர நிர்வாக பிரச்சினையே காரணம...

News

கல்லூண்டாய் பிரச்சினைக்கு மாநகர நிர்வாக பிரச்சினையே காரணம்: முதல்வர் குற்றச்சாட்டு!

September 21, 2026 1:49 pm
கல்லூண்டாய் பிரச்சினைக்கு மாநகர நிர்வாக பிரச்சினையே காரணம்: முதல்வர் குற்றச்சாட்டு!
தற்போது நிலவுகின்ற கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினைக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையினுடைய நிர்வாக பிரச்சினையே காரணம் என்று முதல்வர் மதிவதனி குற்றம் சாட்டியுள்ளார்.

கல்லூண்டாய் குப்பை மேட்டினை பார்வையிட்ட பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளரை நோக்கி இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் தேவையான நிதியை ஒதுக்கி தருகின்றேன், தேவையான வாகனங்கள், ஆளணிகளினை தந்துள்ளேன் அதனை வைத்து நிர்வாகம்தான் சரியாக செயற்பட வேண்டும்.

நிர்வாகம் பொறுப்பற்ற வகையில் நடந்ததால் தான் இவ்வாறு பாரிய பிரச்சினை ஏற்பட்டது என்றார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now