New Updates! Fresh news just arrived.

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் உள்ளிட்டவர்களுக்கு பிணை! - ...

News

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் உள்ளிட்டவர்களுக்கு பிணை!

August 18, 2026 1:57 pm
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் உள்ளிட்டவர்களுக்கு பிணை!
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஆகியோரைப் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழில் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அதன்படி, ஒவ்வொரு சந்தேகநபரும் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த நீதவான், சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்லத் தடையும் விதித்து உத்தரவிட்டார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now