New Updates! Fresh news just arrived.

முரண்பாடுகளைத் தீர்க்கும் முறைகள் குறித்துத் தெளிவூட்டல்!...

News

முரண்பாடுகளைத் தீர்க்கும் முறைகள் குறித்துத் தெளிவூட்டல்!

August 6, 2026 3:07 pm
முரண்பாடுகளைத் தீர்க்கும் முறைகள் குறித்துத் தெளிவூட்டல்!
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சிச் செயலமர்வு கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.

நீதி அமைச்சினால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள மத்தியஸ்த உத்தியோகத்தர் கந்தசாமி அருள்பிரசாந்தனின் ஒருங்கிணைப்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இச்செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

இப்பயிற்சிச் செயலமர்வின் இறுதிநாள் நிகழ்வில், பாடசாலைப் பிரதி அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அத்துடன், வளவாளர்களாக நீதி அமைச்சின் அம்பாறை மாவட்ட மத்தியஸ்த உத்தியோகத்தர் எஸ். றிஸ்மினா, மற்றும் மத்தியஸ்த உத்தியோகத்தர்களான ஐ.எல்.எம். அன்பாஸ், ஏ. பாத்திமா சினோஸ், பாறுக் ஷிஹான் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பயிற்சிகளை வழங்கினர்.

இச்செயலமர்வின் மூலம் மாணவர்கள் மத்தியில் முரண்பாடுகளைத் தீர்க்கும் வழிகள், எதிர்கால மாணவ சமுதாயம் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், பாடசாலை மத்தியஸ்தம், மத்தியஸ்தத்தின் வரலாறு, முரண்பாடு மற்றும் அதன் தீர்வின் முக்கியத்துவம், தொடர்பாடல் திறன்கள், கலந்துரையாடல் முறைகள், மத்தியஸ்தப் படிமுறைகள் மற்றும் பாடசாலை மத்தியஸ்தத்தில் மாணவர்களின் பங்கு என்பன தொடர்பில் மாணவர்களுக்குத் தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now