New Updates! Fresh news just arrived.

கொழும்பு துறைமுக நகரில் ஒருவர் படுகொலை!

News

கொழும்பு துறைமுக நகரில் ஒருவர் படுகொலை!

October 10, 2026 4:26 pm
கொழும்பு துறைமுக நகரில் ஒருவர் படுகொலை!
கொழும்பு துறைமுக நகரில் அமைந்திருக்கும் தொழிலாளர் விடுதிக்கு அருகில் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, குறித்த நபரினால் மேற்க் கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலினால் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தற்கு பின்னர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்டடிருந்த தகராறு முற்றியதினை தொடர்ந்து, கூர்மையான ஆயுதத்தினால் தாக்கியதில் குறித்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கொழும்பு துறைமுகப் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now