முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு!
News

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டமானது இன்றுடன் (13) நிறைவடைகின்றது.
இதன்படி, அரச மற்றும் அரச அணுசரனையின் கீழ் இயங்குகின்ற தனியார் பாடசாலைகளுக்கும் இன்று தொடக்கம் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரைக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, முதலாம் தவணையினுடைய இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக எதிர்வருகின்ற மார்ச் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், முதலாம் தவணையினுடைய இரண்டாம் கட்டப் பாடசாலை நடவடிக்கைகளினை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரைகும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை எதிர்வருகின்ற 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.
பெப்ரவரி 17 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரைக்கும் குறித்த பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
இதற்கு, நாடளாவிய ரீதியில் 3,545 பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளினையும் நடத்துவதற்கு கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.