நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ. வரை கனமழைக்கு வாய்ப்பு!...
News
நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ. வரை கனமழைக்கு வாய்ப்பு!
இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி தாழமுக்கமாக வலுவடைந்து நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் தாக்கத்தால் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகலாம்.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள் உள்ளிட்ட சில பகுதிகளில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது மின்னல் மற்றும் திடீர் பலத்த காற்று தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.