நாகப்பட்டினம் - இலங்கை கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைப்...
News
நாகப்பட்டினம் - இலங்கை கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைப்பு
நாகப்பட்டினம் மற்றும் இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 30 கிலோ வரையிலான பொருட்களை இலவசமாக எடுத்து செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றது.
சுமார் 3 தொடக்கம் 4 மணி நேரம் பயணிக்கும் இந்த கப்பல் சேவை வாரத்துக்கு 6 நாட்கள், அதாவது செவ்வாய்க்கிழமையை தவிர மற்ற நாட்களில் இயக்கப்பட்டு வருகின்கிறது. நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லும் இக்கப்பல் ஒரு நபருக்கு சுமார் 10 கிலோ வரை இலவசமாக பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தது.
அதேசமயம் காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினத்துக்கு ஒரு நபருக்கு ஏற்கனவே 15 கிலோ வரை இலவசமாக பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது.
இலவச அளவையும் தாண்டி மேலதிகமாக பொருட்களை எடுத்து செல்ல விரும்பினால் அதற்கும் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
அதன்படி 5 கிலோ கூடுதல் எடைக்கு 1,000 இந்திய ரூபாயையும், 10 கிலோ கூடுதல் எடைக்கு 1,500 இந்திய ரூபாயையும், 30 கிலோ கூடுதல் எடைக்கு 3,750 இந்திய ரூபாயையும், 60 கிலோ கூடுதல் எடைக்கு 7,500 இந்திய ரூபாயையும் வசூலிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 22 கிலோ வரை கூடுதலாக பொதிகளை எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த கப்பலில் பயணம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பொருட்கள் எடுத்துச்செல்லும் எடையிலும் கூட சலுகை வழங்கப்பட்டு இருக்கின்றது. இது குறித்து கப்பல் போக்குவரத்து நிறுவன முதன்மை வணிக அலுவலர் சிவராம், நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்தியா மற்றும் இலங்கை இடையே நல்லுறவை மேம்படுத்தும் விதமாக தொடங்கப்பட்ட இக்கப்பல் போக்குவரத்து சேவை சிறப்பாக நடந்து வருகின்றது. கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட இரண்டரை ஆண்டுகளில் 2 நாடுகளுக்கும் இடையே 55,310 பயணிகள் ஆன்மிகம், சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கப்பல் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, பண்டிகை கால சலுகையாக ‘சுபம்' கப்பல் நிறுவனம் ஒரு வழி பயண கப்பல் போக்குவரத்து கட்டணத்தை 6 ஆயிரத்தில் இருந்து ரூ.5,500 ரூபாய் ஆக குறைத்துள்ளது.
அதாவது 500 ரூபாய் கட்டணம் குறைக்கப்பட்டு இருக்கின்றது. பயணிகள் இலவசமாக 30 கிலோ வரை பொருட்களை எடுத்து செல்லலாம். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கும் நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இக்கப்பல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.