New Updates! Fresh news just arrived.

நாகொட துப்பாக்கிச் சூடு: உணவக உரிமையாளரின் மனைவியும் உயிர...

News

நாகொட துப்பாக்கிச் சூடு: உணவக உரிமையாளரின் மனைவியும் உயிரிழப்பு!

October 11, 2026 1:57 pm
நாகொட துப்பாக்கிச் சூடு: உணவக உரிமையாளரின் மனைவியும் உயிரிழப்பு!
களுத்துறை, நாகொட பகுதியில் உள்ள உணவகமொன்றின் முன்னால் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த உணவகத்தின் உரிமையாளரின் மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதன்படி, கடந்த 9 ஆம் திகதி காலை 7.40 அளவில் மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவர், குறித்த உணவகத்தினுடைய உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.

குறித்த சம்பவத்தில் உணவகத்தின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த அவரது மனைவியும் நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் தொடங்கொட பகுதியினை சேர்ந்த 52 வயதுடையவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவே​ளை, குறித்த சம்பவத்தோடு, தொடர்புடைய துப்பாக்கிதாரி நேற்றைய தினம் மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தமையானது குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now