போதைப்பொருள் வியாபாரி பம்போ கைது: அம்பாறையில் சம்பவம்! - ...
News
போதைப்பொருள் வியாபாரி பம்போ கைது: அம்பாறையில் சம்பவம்!
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள மிஹிதுபுர போதைப்பொருள் வியாபாரி பம்போ மீது மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவினுடைய உத்தியோகத்தருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி கொழும்பிலிருந்து அம்பாறைக்கு போதைப்பொருளினை கொண்டு சென்ற பம்போ என்னும் போதைப்பொருள் வியாபாரியை அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளதுள்ளது.
இதன்படி, இன்று அதிகாலை இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் கொழும்பு தோட்டலக பகுதியில் இருந்து ஹெரோயினோடு தனியார் பேருந்தில் அம்பாறைக்கு பயணித்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் முயன்ற போதிலும் பொலிஸாரை ஏமாற்றி இந்தக் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து 2677 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் மீட்டதுடன்தோடு, குறித்த சந்தேக நபர் அம்பாறை நகரின் மிஹிதுபுர நவகம்புர கல்மடுவ மற்றும் உதயபுர பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகித்திற்காக வந்திருப்பதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரினை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்