New Updates! Fresh news just arrived.

போதைப்பொருள் சுற்றிவளைப்பு: ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கை...

News

போதைப்பொருள் சுற்றிவளைப்பு: ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

July 18, 2026 3:10 pm
போதைப்பொருள் சுற்றிவளைப்பு: ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபரினை 3,820 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளோடு, சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியினுடைய போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்திற்கு அமைய, பொலிஸ் மா அதிபரினுடைய பணிப்புரைக்கு ஏற்ப நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்புகளின் ஒரு கட்டமாகவே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான கே.ஏ.பி.வி. கஸ்தூரி ஆராய்ச்சி வழிகாட்டலிலும் கல்முனை பிராந்தியத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ. இப்னு அஸாரின் நெறிப்படுத்தலில் குறித்த விசேட நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட புலனாய்வு அதிகாரியான ஏ.ஆர்.எம். பிர்தௌஸ் வழங்கிய இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.பிரகலாதன் தலைமையில் விசேட பொலிஸ் குழுவினரால் இச்சுற்றிவளைப்பானது மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த சந்தேகநபரின் வீட்டை முற்றுகையிட்டு பொலிஸார் நடத்திய திடீர் சோதனையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now