தேசிய நலன், ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் உறு...
News
தேசிய நலன், ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி
ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி அன்வர் எம்.முஸ்தபா, இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அவசரமான அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதையும் விட, அதன் முழுமையான உள்ளடக்கம் அத்துடன் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு மற்றும் எதிர்கால அரசியலமைப்பு நிர்வாகத்தின் மீதான தாக்கங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் அவசியம் என தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற "இளைஞர்கள் பலம்- நாட்டுக்கு பலம்" நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 2026 ஆகஸ்ட் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களில் உயர் நீதிமன்றம் அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான ஏற்பாடுகளும் உள்ளடங்குகின்றன. சட்டமூலம் தற்போது பாராளுமன்றத்தின் ஆளுகை, நீதி மற்றும் குடியியல் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, நீதித்துறையின் தீர்மானம் அத்துடன் சட்டரீதியான நடைமுறைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி வலியுறுத்துகிறது. சபாநாயகர் பாராளுமன்றத்தில் ஆகஸ்ட் 19ஆம் திகதி மூன்று மனுக்கள் தொடர்பான பிரதிகள் தமக்கு கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் ஒரு குறிப்பிட்ட அரசியல் தரப்பின் உடனடி நலன்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதாக இல்லாமல், நாட்டின் நீண்டகால ஜனநாயக நலன், நிறுவனங்களின் சுயாதீனம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் இறையாண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
குறிப்பாக, நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான எந்தவொரு ஏற்பாடும் மிகுந்த கவனத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் ஆராயப்பட வேண்டும். நீதிபதிகளின் ஓய்வூதிய வயது உள்ளிட்ட விடயங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் பொதுமக்களின் நீதித்துறை மீதான நம்பிக்கை ஆகியவற்றில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பில் அரசாங்கமும் பாராளுமன்றமும் விரிவான விளக்கங்களை வழங்க வேண்டும்.
அதேபோல அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விவாதம் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையிலான அரசியல் மோதலாக மாற்றப்படாமல், அனைத்து அரசியல் கட்சிகளினதும் கருத்துக்களை உள்வாங்கும் தேசிய கலந்துரையாடலாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பு என்பது ஒரு அரசாங்கத்திற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சிக்கோ சொந்தமான ஆவணம் அல்ல. அது இலங்கையின் அனைத்து மக்களினதும் உரிமைகள், சுதந்திரங்கள் மற்றும் எதிர்கால அரசியல் நிர்வாகத்தை தீர்மானிக்கும் அடிப்படை ஆவணமாகும். எனவே, அதன் ஒவ்வொரு திருத்தமும் மக்களின் நம்பிக்கையை மாத்திரம் உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
22ஆவது திருத்தம் தொடர்பில் ஆதரவோ எதிர்ப்போ என்ற இரு முனை அணுகுமுறையைத் தவிர்த்து, சட்டமூலத்தின் ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியாக ஆராய்ந்து, அதன் நன்மை, சாத்தியமான பாதிப்பு மற்றும் நடைமுறை விளைவுகளை மதிப்பீடு செய்வதே பொறுப்பான அரசியல் அணுகுமுறையாகும்.
நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்பில் நிலையான மாற்றங்களை ஏற்படுத்தும் எந்தவொரு திருத்தமும் பாராளுமன்றத்தில் போதிய விவாதமின்றி அவசரமாக நிறைவேற்றப்படக்கூடாது. குறிப்பாக, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது தொடர்பான மாற்றங்கள் குறித்து சட்ட நிபுணர்கள், அரசியலமைப்பு அறிஞர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
அரசாங்கம் முன்வைக்கும் திருத்தங்களை எந்தவிதமான ஆய்வுமின்றி ஏற்றுக்கொள்வதும் முழுமையாக நிராகரிப்பதும் ஜனநாயகத்திற்கு உகந்த அணுகுமுறைகள் அல்ல. ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கட்சி அரசியலைத் தாண்டி, தேசிய நலன், ஜனநாயகப் பாதுகாப்பு, மற்றும் நீதித்துறையின் சுயாதீனம், அதிகாரங்களின் சமநிலை அத்தோடு மக்களின் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி தனது நிலைப்பாட்டை அமைக்கும்.
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் முன்னர், நாட்டின் அனைத்து அரசியல் மற்றும் சமூக தரப்பினருடனும் அர்த்தமுள்ள கலந்துரையாடலை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
இலங்கையின் அரசியலமைப்பு மாற்றங்கள் குறுகியகால அரசியல் தேவைகளுக்காக அல்லாமல், எதிர்கால தலைமுறைகளுக்கும் பயனளிக்கும் வகையில் நிலையான ஜனநாயக நிறுவனங்களை உருவாக்கும் நோக்குடன் அமைய வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சியின் தெளிவானதும் நடுநிலையானதுமான நிலைப்பாடாகும் என்று தெரிவித்தார்.
(நூருல் ஹுதா உமர்)