New Updates! Fresh news just arrived.

தேசிய மட்ட உதைப்பந்தாட்டப் போட்டி: சம்மாந்துறை தேசிய பாடச...

News

தேசிய மட்ட உதைப்பந்தாட்டப் போட்டி: சம்மாந்துறை தேசிய பாடசாலை அணி வெற்றி!

October 3, 2026 9:16 am
தேசிய மட்ட உதைப்பந்தாட்டப் போட்டி: சம்மாந்துறை தேசிய பாடசாலை அணி வெற்றி!
2026ஆம் வருடத்திற்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உதைப்பந்தாட்டப் போட்டிகள் நேற்று 02 ஆம் திகதி யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரி (St. John's College) மைதானத்தில் ஆரம்பமாகியது.

மாகாண மட்டப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், கிழக்கு மாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் சம்மாந்துறை தேசிய பாடசாலையின் 20 வயதிற்கு உட்பட்ட உதைப்பந்தாட்ட அணி தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற தனது முதலாவது தேசிய மட்டப் போட்டியில் , தம்புத்தேகம மத்திய கல்லூரி அணியை சம்மாந்துறை தேசிய பாடசாலை அணி
எதிர்கொண்டிருந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் இறுதியில், சம்மாந்துறை தேசிய பாடசாலை அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, தேசிய மட்டப் போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருந்தது.

தேசிய மட்டத்தில் கிழக்கு மாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தி விளையாடி வெற்றியைப் பெற்றுள்ள சம்மாந்துறை தேசிய பாடசாலை உதைப்பந்தாட்ட அணிக்கு பாடசாலை சமூகம் மற்றும் பிரதேச மக்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

(தில்சாத் பர்வீஸ்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now