New Updates! Fresh news just arrived.

நுவரெலியா ஸாஹிரா வித்தியாலயத்திற்கு தேசிய உற்பத்தித்திறன்...

News

நுவரெலியா ஸாஹிரா வித்தியாலயத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் விருது

October 31, 2026 1:40 pm
நுவரெலியா ஸாஹிரா வித்தியாலயத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் விருது
நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள ஒரேயொரு முஸ்லிம் பாடசாலையான நுவரெலியா ஸாஹிரா வித்தியாலயம், தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ், தேசிய உற்பத்தித்திறன் செயலகம் நடாத்திய தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/26 விழாவில், ஸாஹிரா வித்தியாலயத்திற்கு Commendation எனும் பாராட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

சாதாரண தரம் வரையிலான அரச பாடசாலைகள் பிரிவில், உற்பத்தித்திறன் மற்றும் தர முகாமைத்துவத்தில் சிறந்து விளங்கியமைக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

நேற்று 2026 அக்டோபர் 30ஆம் திகதி நடைபெற்ற இவ்விருது விழாவில், இதற்கான சான்றிதழை அமைச்சின் செயலாளர் J.M. திலகா ஜயசுந்தர மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலக பணிப்பாளர் நாயகம் W.M.D. சுரங்க குணரத்ன ஆகியோர் கையொப்பமிட்டு வழங்கியுள்ளனர்.

இவ்விருதை பாடசாலை சார்பில் அதிபர் மேடையில் பெற்றுக்கொண்டார்.

இம்மாபெரும் வெற்றிக்கு வழியமைத்த காரணம் அதிபர் ஜே. நிஸாம்தீன், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருமாகும்.

இது நுவரெலியா முஸ்லிம் சமூகத்திற்கும், கல்வி வரலாற்றுக்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now