New Updates! Fresh news just arrived.

நாடளாவிய விசேட நடவடிக்கை: 24 பேர் குற்றச் செயல்களுடன் தொட...

News

நாடளாவிய விசேட நடவடிக்கை: 24 பேர் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம்!

August 26, 2026 3:59 pm
நாடளாவிய விசேட நடவடிக்கை: 24 பேர் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம்!
நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, குற்றச் செயல்களுடன் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்ட 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று (25) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்த நடவடிக்கைகளில் மொத்தம் 26,868 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகத்தின் அடிப்படையில் 490 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 76 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 148 பேர் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now