New Updates! Fresh news just arrived.

நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கை: 585 பேர் கைது!...

News

நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கை: 585 பேர் கைது!

February 14, 2026 5:30 pm
நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கை: 585 பேர் கைது!
குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 585 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, நேற்று (14) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 29,367 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதன்போதே குறித்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையளம் காணப்பட்டுள்ளதுடன், 142 திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இத்தேடுதல் நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டில் 352 பேரும், கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டில் 91 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,318 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now