New Updates! Fresh news just arrived.

"இயற்கையின் சீற்றங்களும் சமூக பொருளாதாரத் தாக்கங்களு...

News

"இயற்கையின் சீற்றங்களும் சமூக பொருளாதாரத் தாக்கங்களும்" : டித்வா அனர்த்த நூல் வெளியீடு!

February 18, 2026 4:33 pm
"இயற்கையின் சீற்றங்களும் சமூக பொருளாதாரத் தாக்கங்களும்" : டித்வா அனர்த்த நூல் வெளியீடு!
றசாக் முஹம்மட் அலி எழுதிய டித்வா அனர்த்தம் தொடர்பான நூல் வெளியீட்டு விழா அண்மையில் மாலை அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் றாஷித் யெஹ்யா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

‘இயற்கையின் சீற்றங்களும் சமூக பொருளாதாரத் தாக்கங்களும்’ எனப் பெயரிடப்பட்ட குறித்த நூல், டித்வா அனர்த்தத்தினால் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களினை ஆவணப்படுத்தியுள்ள சிறந்த ஆய்வுக் கையேடாகும். இந்நூல் தொடர்பான கருத்துரைகளினை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், சிரேஷ்ட விரிவுரையாளரான அப்துல் றஸாக் மற்றும் எழுத்தாளர் சிராஜ் மசூர் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும், அக்கரைப்பற்று மாநகர முதல்வருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் கலந்து சிறப்பித்தார். விசேட அதிதிகளாக முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் முஹம்மட் நவாஸ் மற்றும் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.எம். தௌபீக் ஆகியோர் பங்கேற்றனர்.

நூலாசிரியர் றசாக் முஹம்மட் அலி அவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் நீண்டகாலம் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றவர். நூலகப் பணிக்காலத்தில் வாசிப்போரினை நேசித்து ஊக்குவித்த அவர், பலருக்கும் அறிவியல் மற்றும் இலக்கிய வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். பல்துறைக் கலைஞரான அவர் கலைத் துறையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராவார். மேலும் அக்கரைப்பற்று ஹல்லாஜ் கலை மன்றத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகின்றார்.

டித்வா அனர்த்தம் தொடர்பான தகவல்களை தொகுத்து சமூக நினைவகமாக நிலைநிறுத்தும் இந்நூல், எதிர்கால ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு முக்கியமான ஆவணமாக அமையும் என விழாவில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now