New Updates! Fresh news just arrived.

கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை ; இலங்கை கடல் பகுதியில் ர...

News

கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை ; இலங்கை கடல் பகுதியில் ரூ.400 கோடிக்கும் அதிக பெறுமதியுள்ள ஹெரோயின் பறிமுதல் – படகு உரிமையாளர் உட்பட பலர் கைது

April 18, 2026 12:28 pm
கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை ; இலங்கை கடல் பகுதியில் ரூ.400 கோடிக்கும் அதிக பெறுமதியுள்ள ஹெரோயின் பறிமுதல் – படகு உரிமையாளர் உட்பட பலர் கைது
இலங்கை கடல் பகுதியில் நடைபெற்ற இரு தனித்தனி நடவடிக்கைகளில், சுமார் ரூ.400 கோடிக்கும் அதிக பெறுமதியுள்ள ஹெரோயின் போதைப்பொருள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடற்படையினரின் வழக்கமான கடல் ரோந்து நடவடிக்கையின் போது, ஆழ்கடல் மீன்பிடி படகொன்றில் மறைத்து கொண்டு வரப்பட்டிருந்த பெருமளவிலான ஹெரோயின் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக படகை நிறுத்தி மேற்கொண்ட சோதனையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. ஆரம்ப விசாரணைகளில், இந்த போதைப்பொருள் இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்குள் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் இடம்பெற்ற விசாரணைகளில், சுமார் 150 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயினை கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் ‘தெனுவன் புதா’ எனும் பலநாள் மீன்பிடிப் படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 13ஆம் திகதி நடுக்கடலில் கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களின் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் தொடர்ச்சியாகவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்ததாவது, கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி ரூ.400 கோடியை மீறுகிறது. விசாரணைகளில், வெளிநாட்டில் உள்ள கடத்தல்காரர் ஒருவரின் ஒருங்கிணைப்பில், ஈரானியக் கப்பலிலிருந்து பெறப்பட்ட போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதற்காக படகு உரிமையாளர் மற்றும் மீனவர்களுக்கு சுமார் ரூ.20 கோடி வழங்க உடன்பாடு ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக ஆய்வுகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும் நோக்கில் மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now