துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை ...
News
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!
அம்பாறையின் பணமை பகுதியில் உள்ள இலங்கை கடற்படை அப்பகுதியில் சுற்றித்திரிந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு தேவையான சிகிச்சை அளிக்க அண்மையில் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவுக்கு உதவி செய்துள்ளனர்.
தென் கிழக்கு கடற்படை கட்டளையின் பிரகாரம் இலங்கை கடற்படை கப்பல் மகாநாக முகாம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை அவதானித்திருந்தது.
இதற்கமைய அம்பாறை வனவிலங்கு பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய அம்பாறை வனவிலங்கு சுகாதாரப் பிரிவின் சிரேஷ்ட கால்நடை மருத்துவர் நிஹால் புஷ்பகுமார உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் யானைக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளித்தனர்.
காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க வந்த குழுவினருக்கு கடற்படை தேவையான உதவிகளை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்