பருத்தித்துறை ஆதார வைத்தியாசலையில் என்பு முறிவு சத்திர சி...
News
பருத்தித்துறை ஆதார வைத்தியாசலையில் என்பு முறிவு சத்திர சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் என்பு முறிவு சத்திர சிகிச்சை நிலையம் இன்று திறந்து வைக்கபட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி தங்கராசா கண்டீபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு, மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டன.
தொடர்ந்து என்பு முறிவு சத்திர சிகிச்சை நிலையத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியாசாலையின் மருத்துவ அத்தியட்சகர் வைத்திய கலாநிதி தங்கராசா கண்டீபன், என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் விமல்ராஜன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இதில் விசேட வைத்திய நிபுணர்களான கங்கை ஆணன், சிவபாலன், பெண் நோயியல் நிபுணர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை நலன்புரி சங்க நிர்வாகிகளான பேராசிரியர் நடராஜசுந்தரம், முன்னாள் மவட்ட செயலர் நீக்லஸ்பிள்ளை, வைத்தியசாலை கணக்காளர் ராதை, நிர்வாக உத்தியோகத்தர் பாஸ்கரன், மருத்துவமனை தாதியர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள், நோயாளர் நலன்புரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பு.கஜிந்தன்