New Updates! Fresh news just arrived.

நீர்கொழும்பு சிறை மோதல்: காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்த...

News

நீர்கொழும்பு சிறை மோதல்: காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்த நீதி அமைச்சர்

July 7, 2026 12:31 pm
நீர்கொழும்பு சிறை மோதல்: காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்த நீதி அமைச்சர்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளின் நலம் விசாரிப்பதற்காக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று (06) பிற்பகல் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர், காயமடைந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை நடவடிக்கைகள் மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 23 சிறைச்சாலை அதிகாரிகள் தற்போது நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, குறித்த மோதலில் காயமடைந்த 54 கைதிகளும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now