நீர்கொழும்பு சிறை மோதல்: உயிரிழந்த அதிகாரிகளுக்கான இழப்பீ...
News
நீர்கொழும்பு சிறை மோதல்: உயிரிழந்த அதிகாரிகளுக்கான இழப்பீடுகள் வழங்கி வைப்பு!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இழப்பீட்டுத் தொகையினை வழங்கும் நிகழ்வானது இன்று (21) சிறைச்சாலை தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, உயிரிழந்த ஒவ்வொரு அதிகாரியினுடைய குடும்பத்தினருக்கும் மற்றும் பிள்ளைகளுக்கும் தலா 20 இலட்சம் ரூபாவானது வழங்கப்பட்டது.
இதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் போது சிறைச்சாலை அவசரப் பிரதிபலிப்பு தந்திரோபாயப் பிரிவினை சேர்ந்த 10 அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இதற்கமைய, தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தினுடைய அக்ஹார காப்பீட்டுத் தொகையின் கீழ் அவர்களது உறவினர்களுக்கு குறித்த இழப்பீட்டுத் தொகையானது இன்று வழங்கப்பட்டது.
நிகழ்வில் கருத்துத் தெரிவித்த தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தினுடைய பிரதம நிறைவேற்று அதிகாரியான யுஷான் தரங்க, இவ்வாறான எதிர்பாராத சந்தர்ப்பங்களில், குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் அனைத்தினையும் முழுமையாகப் பெறாமல், குறித்த சூழ்நிலையை எதிர்கொண்ட சிறைத்துறை அதிகாரிகளுக்கு குறித்த இழப்பீட்டுத் தொகையை மிக விரைவாகவும் துரிதமாகவும் வழங்க காப்பீட்டு அறக்கட்டளையின் நிதியம் தீர்மானித்ததாகத் தெரிவித்தார்.
மேலும், குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த, உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளினுடைய குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது மாத்திரமன்றி, மேலும் பல நிவாரணங்களினை வழங்கும் வேலைத்திட்டமொன்றினையும் சிறைச்சாலை திணைக்களமானது ஆரம்பித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.