New Updates! Fresh news just arrived.

நேபாள வெள்ள அனர்த்தம்: உயிரிழப்பு 157 ஆக அதிகரிப்பு! - Gu...

News

நேபாள வெள்ள அனர்த்தம்: உயிரிழப்பு 157 ஆக அதிகரிப்பு!

August 27, 2026 7:34 am
நேபாள வெள்ள அனர்த்தம்: உயிரிழப்பு 157 ஆக அதிகரிப்பு!
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.

இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் நேபாளப் பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, திபெத் பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தில் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 265 பேர் காணாமல் போயுள்ளதாக சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் அங்கு தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆன்மீகப் பயணங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்கின் காரணம் தொடர்பில் ஆரம்பத்தில் நிலநடுக்கம் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், பின்னர் மண்சரிவுடன் தொடர்புடைய நில அதிர்வே இதற்குக் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தத்தினால் பல்வேறு உட்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன. இதனால் நாடு முழுவதும் அதிர்ச்சியும் துயரமும் ஏற்பட்டுள்ளதாக நேபாள பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now