New Updates! Fresh news just arrived.

ஈரான் மீது போர் தொடுக்க தேர்தலில் வெற்றியை கோரும் நெதன்யா...

News

ஈரான் மீது போர் தொடுக்க தேர்தலில் வெற்றியை கோரும் நெதன்யாகு!

October 27, 2026 10:11 am
ஈரான் மீது போர் தொடுக்க தேர்தலில் வெற்றியை கோரும் நெதன்யாகு!
இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவோடு ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை மறுபடியும் தொடங்கக்கூடும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னதாக தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், "நாம் தொடங்கிய வேலையினை முடித்துக்காட்ட வேண்டும், என்று நெதன்யாகுவிற்கு வாக்களியுங்கள்" எனக் கூறி அவருக்கு வெளிப்படையான ஆதரவினை வழங்கியிருந்தார்.

நெதன்யாகு அதிகாரத்தினை நீடிக்கும் வரைக்கும் மட்டுமே ஈரானிய அச்சுறுத்தலை முழுமையாக அகற்ற ட்ரம்ப் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்த நெதன்யாகு, ஈரானிய ஆட்சியை வீழ்த்துவதே குறித்த அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழி என்பதினால், அதற்கான திட்டங்களினை முன்னெடுக்குமாறு இஸ்ரேலிய உளவுத்துறை மற்றும் இராணுவத்திற்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சவாலான சூழ்நிலைகளிலும் நெதன்யாகு மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாக ட்ரம்ப் பாராட்டியுள்ள சூழலில், புதிய நாடாளுமன்றத்தினை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இஸ்ரேலில் நடைபெறுகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now