New Updates! Fresh news just arrived.

வாகன இலக்கத் தகடுகளை விரைவாக விநியோகிக்க புதிய நடவடிக்கை!...

News

வாகன இலக்கத் தகடுகளை விரைவாக விநியோகிக்க புதிய நடவடிக்கை!

September 13, 2026 5:04 pm
வாகன இலக்கத் தகடுகளை விரைவாக விநியோகிக்க புதிய நடவடிக்கை!
வாகன இலக்கத் தகடுகளினை தாமதமின்றி விரைவாக விநியோகிப்பதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமான, ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த இலக்கத் தகடுகளினை தயாரிக்கும் நிறுவனத்திற்கு, பிறிதொரு இடத்திலும் அதன் உற்பத்திகளினை உடனடியாக ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பாண்டின் மார்ச் மாதத்திற்குப் பின்பு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, கடந்த ஜூன் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் எதிர்வருகின்ற மாதத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, 2025ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளினை தயாரிக்கும் பொறுப்பு வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அந்த நிறுவனத்திற்கும் வேறொரு இடத்தில் உற்பத்தியினை தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு வாகனங்களுக்கான இலக்கத் தகடு நிலுவைகளினை முழுமையாகத் தயாரித்து முடிப்பதற்கு குறித்த நிறுவனத்திற்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now